ஐந்து பாகிஸ்தான் பெண்களின் ஆணவக்கொலை தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு வெளியானது!

பாக்கிஸ்தானில் ஐந்து பெண்களை ஆணவக்கொலைசெய்த மூவரிற்கு நீதிமன்றம் ஆயுளதண்டனை விதித்துள்ளது.

கோஹிஸ்தான் ஆணவக்கொலைஎன அழைக்கப்படும் படுகொலைக்காக ஒமார்கான், சஹீர் மற்றும் சபீர் என்ற மூவரிற்கே நீதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியுள்ளது.

2011 இல் கோகிஸ்தான் என்ற கிராமத்தை சேர்ந்த ஆண்களும் பெண்களும் திருமண நிகழ்வொன்றி;ல் பாடல்பாடி நடனமாடியதை காண்பிக்கும் வீடியோவொன்று வெளியானது.

இதனை தொடர்ந்து உள்ளுர் பஞ்சாயத்து வழங்கிய தீர்ப்பின்படி ஐந்து பெண்களும் குறிப்பிட்ட பழங்குடி இன ஆண்களால் கொல்லப்பட்டனர்.

இதற்கு ஒரு வருடத்தின் பின்னர் வீடியோவில் காணப்பட்ட மூன்று சகோதரர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து இவர்களின் சகோதரர் அவ்சால் கொகிஸ்தானி பெண்கள் கொல்லப்பட்ட உண்மையை பகிரங்கப்படுத்தினார்.

இந்த கொலைகள் தொடர்பாக உயர் நீதிமன்றம் விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

2018 இல் நீதிபதியொருவர் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை இந்த கொலைகள் தொடர்பில் விசாரணையை முன்னெடுக்கவேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த அவ்சால் கொகிஸ்தானி 2019 மார்ச் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொல்லப்பட்ட பெண்களின் உடல்களும் மீட்கப்படாதமை குறிப்பிடத்தக்கது.

இந்த கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களில் மூவரிற்கே நீதிமன்றம் ஆயுள்தண்டனையை விதித்துள்ளது.