திருமண பந்தத்தில் இணைகின்றார் நாமல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இன்று திருமண பந்தத்தில் இணைவுள்ளனர்.

நாமல் ராஜபக்ச பிரபல வர்த்தகரான திலக் வீரசிங்கவின் மகளுடனேயே திருமண பந்தத்தில் இணையவுள்ளனர்.

இன்று காலை கொழும்பு கங்காராம விகாரையில் மத நிகழ்வு இடம்பெற்ற, வீரக்கெட்டிய கால்டன் வீட்டில் திருமண நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த திருமண நிகழ்விற்காக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசியல்வாதிகள் அனைவருக்கும் நாமல் தனித்தனியாக அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.