விழித்துக் கொண்டதா பாகிஸ்தான் கிரிக்கெட் அணி? 'ஸ்டெடி அன்ட் அக்ரசிவ்' கோச் நியமனம்!

பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக் மூன்று வருட ஒப்பந்தத்தில் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் செயல்பாடு அண்டர் ஆவரேஜ் என்று சொல்லும் அளவிற்கே இருந்து வருகிறது. அவ்வப்போது எழுச்சி காட்டும் பாகிஸ்தான், அப்படியே பாய் போட்டு சில ஆண்டுகளுக்கு படுத்துவிடும்.

சில முரணான வீரர்கள் தேர்வு, எதிர்கால திட்டமிடல் போன்றவற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சறுக்கியது. இந்த முடிவு, நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் சப்தமாகவே எதிரொலித்தது.

இந்நிலையில், முன்னாள் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கை, பாகிஸ்தான் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது பாக்., கிரிக்கெட் நிர்வாகம்.