காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு விசேட வெகுமதி – நிதியமைச்சு அறிவிப்பு!

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு நவம்பர் மாதம் முதல் 6000 ரூபா கொடுப்பனவு ஒன்றை வழங்க தீர்மானித்துள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

வடக்கில் போன்று தெற்கிலும் காணாமல் போனோரின் குடும்பத்திற்கும், பொலிஸ் மற்றும் முப்படைகளின் காணாமல் போனோரின் குடும்பங்களுக்கும் கொடுப்பனவை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.