இன்றைய ஸ்ரீ ல.சு.கட்சியின் மாநாட்டில் மைத்திரி வெளியிடவிருக்கும் முக்கிய அறிவிப்பு என்ன?

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இன்று (03) இடம்பெறவுள்ள 68 ஆவது தேசிய மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இன்றைய மாநாடு நடைபெறவுள்ளது.

அரசியல் தீர்மானங்களை நாம் எடுக்க வேண்டிய நேரத்தில் உரிய முறையில் எடுப்போம். அதில் யாரும் சந்தேகங்களை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை. இந்த மாநாட்டின் போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான ஒரு வரையறையை அறிவிக்கவுள்ளோம்.

எதிர்வரும் அமையவுள்ள அரசாங்கத்தின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எந்தவிதத்தில் செயற்படுவது என்பது குறித்த விளக்கமும் இந்த மாநாட்டில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.