ஜனாதிபதி தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பில் ஆணையாளர் விடுத்துள்ள அறிவிப்பு!

ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்யும் தினம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கூடி தீர்மானம் எடுக்கவுள்ளதாகவும், அது தொடர்பில் ஒரு தினத்தை தனக்கு அறிவிக்க முடியாதுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நவம்பர் 15 ஆம் திகதிக்கும் டிசம்பர் 7 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படும் தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

களுத்தறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் தேர்தல்கள் தொடர்பில் அதிகாரிகளை அறிவுறுத்தும் சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.