நாடு கடத்தப்படவுள்ள தமிழ் குடும்பம்! நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ள தமிழ் குடும்பத்தின் நாடு கடத்தல் மீதான தடை உத்தரவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை நீதிமன்றத்தினால் நீடிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய பிரியா, அவரது கணவர் நடேசலிங்கம் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவரது பிள்ளைகள் கிறிஸ்துமஸ் தீவில் தொடர்ந்தும் தங்கியிருப்பார்கள்.

பிரியா – நடேசலிங்கம் தம்பதியின் மகளான தாருணிகாவின் மனு மீதான விசாரணைகள் தொடர்ந்து விசாரிக்கப்படுகின்றது. அதற்கமைய வெள்ளிக்கிழமை பிற்பகல் 4 மணி வரை அவர்களுக்கான தடை நீடிக்கப்பட்டுள்ளதாக இன்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த குடும்பத்தில் உள்ள மூவரின் புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட போதிலும், தாரூணிகா ஒருபோதும் விசாவிற்கு பரிசீலிக்கப்படவில்லை என்று தமிழ் குடும்பத்தில் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் இன்று வாதிட்டனர்.

குடிவரவு சட்டத்தின் கீழ், படகில் ஆஸ்திரேலியாவுக்கு வருபவர்கள் அங்கு இருக்கும்போது விசாவிற்கு விண்ணப்பிக்க முடியாது. எனினும் தாருணிகா ஆஸ்திரேலியாவில் பிறந்தவர், அதற்கமைய அவரது பெற்றோருக்கு அதே விசா அந்தஸ்தும் வழங்கப்படுகிறது. குடிவரவு அமைச்சருக்கு இது தொடர்பில் தீர்மானிப்பதற்கான அதிகாரங்கள் உள்ளன.

அரசாங்கத்திற்காக செயல்படும் சட்டத்தரணிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டனர், அரசாங்கம் சமர்ப்பித்த புதிய ஆதாரங்களை பரிசீலிக்க அவரது குடும்பத்தினர் மேலதிக கால அவகாசம் கோரியுள்ளனர்.

நீதிபதி Mஒர்டெcஐ Bரொம்பெர்க் வழக்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைத்தார். குடும்பத்தின் சட்டப் பிரதிநிதிகள் புதிய தகவல்களை மறுஆய்வு செய்ய அனுமதி வழங்கினார். இந்த வழக்கை தொடர அனுமதிப்பது “நீதியின் நலனுக்காக” என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.