நடுக்காட்டில் காணமற்சென்ற சிறார்கள் - நடந்தது என்ன?
பீதூறுதலாகல காட்டில் நிர்கதியான இரண்டு பிள்ளைகள் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மிக சிரமமான தேடுதலின் பின்னர் கண்டுபிடிக்கப்படடனர். வழிக்காட்டிகள் இன்றி அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொலிசார் பொதுமக்களை கேட்டுள்ளனர்.

ஹங்குராங்கெத்த மந்தாரம்நுவர பகுதியில் உள்ள ஹெலபத்தன நீர் ஊற்றை அண்டிய காட்டு பகுதிக்கு சென்றிருந்த போது இப்பிள்ளைகள் காணாமல் பொயுள்ளனர். பன்னிப்பிடிய பகுதியில் இருந்து சுற்றலா சென்ற இவர்கள் அங்கு நிர்கதியாகியுள்ளனர். அப்பகுதியில் சிறுத்தைகள் கூடுதலாக இருப்பதால் பிள்ளைகளை தேடும் பணி சிறப்பாக இருந்தது. நேற்று மாலை முதல் இன்று காலை வரை சுற்றுலா வழிகாட்டிகள், பிரதேச்வாசிகள் மற்றும் பொலிசார் இணைந்து பிள்ளைகள் இருவரையும் தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.