ஐ.எஸ்.ஐ.எஸ். உடன் தொடர்பு வைத்திருந்த முஸ்லீம் வர்த்தகருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்டிருந்த சந்தேகநபரான பிரபல வர்த்தகர் ஒருவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தடுத்து விசாரணை மேற்கொண்டதன் பின்னர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (11) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.