புகையிரத பெண்கள் பிரிவில் பயணித்த ஆண்களை என்ன செய்தார்கள்?

புகையிரதத்தில் பெண்களுக்கு என விசேடமாக ஒதுக்கப்பட்டிருக்கும் பகுதியில் பயணம் செய்த 10 ஆண்கள் புகையிரத பாதுகாப்பு அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மஹவையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி வருகை தந்த புகையிரதத்தில் பயணித்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒதுக்கப்பட்டிருக்கும் பெட்டிகளில் அனுமதியின்றி பயணித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள நபர்களில் இன்று காலை தொழிலுக்காக வருகை தந்தவர்களும் அடங்குவதாக புகையிரத பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த நபர்களில் ஒருவரிடமிருந்து 1500 ரூபாவும் ஏனையவர்களிடமிருந்து 1000 ரூபாவும் தண்டப்பணம் பெறப்பட்டதாகவும் புகையிரத பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.