கல்கிசை விபச்சார விடுதியில் சிஐடியினர் வேட்டை – 7 பேர் கைது!

கல்கிஸ்ஸ – கட்டுகுருந்துவத்தை பகுதியில் தொடுகை சிகிச்சை நிலையம் எனும் போர்வையில் இயங்கிவந்த இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 6 பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய,கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவுக்கமையவே நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன்போது குறித்த விபச்சார நிலையத்தை முகாமை செய்தமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட இருவரும் , விபச்சார தொழிலில் ஈடுபடுபவர்கள் எனும் சந்தேகத்தில் 5 பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இமதுவ ,கம்பஹா, மொணராகலை,பாதுக்க மற்றும் நாவலப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21- 49 வயதுக்கு இடைப்பட்ட 6 பெண்களும் , மொரவக்க பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.