எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் 3வது கண்காட்சி யாழில்..

எண்டர்ப்ரைஸ் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் மூன்றாவது கண்காட்சி எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகவுள்ளது. யாழ் மாவட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கிடையில் விவசாய தொழிற்துறை, கைத்தொழில், மீன்பிடி மற்றும் சுற்றுலா துறையை அடிப்படையாக வைத்து தொழில்முயற்சியாளர்களை உருவாக்குவதே இதன் நோக்கமாகுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.