இம்மாத இறுதியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவரும்!

ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு இம்மாத இறுதியில் விடுக்கப்படும் என தேர்தல்கள் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதன்படி, அக்டோபர் நடுப்பகுதியில் வேட்புமனுக்கள் ஏற்கப்படும் எனவும், நவம்பர் 15 முதல் 30 வரையுள்ள சனிக்கிழமைகளில் வாக்களிப்பு நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தல் சட்டத்தின்படி, ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட இரண்டு வாரங்களுக்குள் வேட்பு மனுக்கள் கோரப்பட வேண்டும், மேலும் வேட்பு மனு ஒப்படைக்கப்பட்ட நாளிலிருந்து ஐந்து முதல் ஏழு வாரங்களுக்குள் தேர்தல் வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு அஞ்சல் வாக்களிக்க தகுதியுள்ள அரச அதிகாரிகளுக்கு அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2018 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதாகவும் தேர்தல்கள் செயலக தகவல்கள் மேலும் கூறியுள்ளன.