ஜனாதிபதித் தேர்தல்: மஹிந்த தேசப்பிரிய அதிரடி வேட்டை!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ளார் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவித்தலை விசேட வர்த்தமானியில் அவர் இம்மாத நடுப்பகுதியில் வெளியிடுவாரென்றும் அது தொடர்பில் அரச அச்சகரை அவர் சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளதாகவும் அறியமுடிந்தது.

பெரும்பாலும் வரும் 18 அல்லது 19 ஆம் திகதிகளில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியாகலாமென தெரிகிறது.

இதேவேளை அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுடனும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளார்.

ஏற்கனவே அரச உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் , அரச வாகனங்களை தேர்தலுக்கு பயன்படுத்துவது பற்றியும் கலந்துரையாடியுள்ளார்.