வாக்காளர் பெயர்ப் பட்டியலைப் பரீட்சித்து கொள்ளுமாறு கோரிக்கை!

நாட்டிலுள்ள எந்தவொரு வாக்காளருக்கும் 2019 ஆம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் இடாப்பில் தனது பெயர் இருக்கின்றதா என்பதை பரீட்சித்துப் பார்த்துக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கிராம சேவை உத்தியோகத்தர் அல்லது தேர்தல்கள் ஆணைக்குழுவின் slelections.gov.lk எனும் இணையத்தளம் என்பவற்றிலும் இவ்வாறு சரிபார்த்துக் கொள்ள முடியும்.

யாராவது ஒரு வாக்காளரின் பெயர் 2019 ஆம் ஆண்டின் வாக்காளர் பெயர்ப் பட்டியலில் காணப்படாது போனால் அவர் உடன் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கும்படியும் ஆணைக்குழு கேட்டுள்ளது.