இனி கத்தார் செல்வோர் இதனை கடைபிடிக்க வேண்டும்!

இலங்கையில் உள்ள கத்தார் தூதுவராலயத்தில் சான்றிதழ்களை அத்தாட்சிப்படுத்திக் கொள்வது தொடர்பாக புதிய அறிவுறுத்தல்கள்:

கடந்த காலங்களில் கத்தாரில் தொழில் புரிய விரும்புவோர் தமது கல்வி மட்டும் ஏனைய சான்றிதழ்களை இலங்கை வெளிவிவகார கொன்சுலர் பிரிவில் அத்தாட்சிப் படுத்திய பின்னர் கத்தார் தூதரகத்தில் அத்தாட்சிப் படுத்திக் கொள்வர்.

என்றாலும் அண்மைக் காலமாக கல்விச் சான்றிதழ்களைப் பொறுத்தவரையில் இலங்கை கல்வி உயர்கல்வி அமைச்சு வழங்கும் சாதாரண தர உயர்தர சான்றிதழ்கள் பலகலைக் கழக சான்றிதல்களை மாத்திரமே தூதரகம் அத்தாட்சிப் படுத்துகிறது.

வேறு அரச நிறுவனங்கள் அல்லது தனியார் கல்லூரிகள் அல்லது இங்கிருந்து பெறும் வெளிநாட்டு கல்வி உயர்கல்வி கல்விச் சான்றிதழ்களை தூதரகம் அத்தாட்சிப் படுத்துவதில்லை.

கத்தார் அரசின் அறிவுறுத்தல்களுக்கு அமையவே இந்த நடைமுறை அமுலாகிறது, இது தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் இலங்கை கலவி உயர்கல்வி அமைச்சு அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு மற்றும் நிபுணர்கள் கத்தார் அரசுடன் தான் பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும்.

உதாரணமாக ஐக்கிய இராச்சியம் அவுஸ்திரேலிய, இந்திய, மலேஷியா, நியூசிலாந்து, அமேரிக்கா என பல்கலைக் கழகங்களின் சான்றிதல்களை இங்குள்ள தனியார் கல்வி நிறுவனங்களூடாக பெறுவோர்... சிரமங்களை எதிர் கொள்கின்றனர், அவற்றை அந்தந்த நாடுகளில் உள்ள கத்தார் தூதரகங்களூடாகவே உறுதிப் படுத்திக் கொள்ளுமாறு வேண்டப்படுவதால் குறிப்பிட்ட நிறுவனங்களூடாக அதற்குரிய ஒழுங்குகளை செய்து கொள்ள வேண்டும்.

அதேபோன்றே இலங்கை தொழில்நுட்ப, தொழில்பயிற்சி நிறுவனங்களின் சான்றிதழ்களும் அத்தாட்சிப் படுத்தப் படுவதில்லை.

மத்திய கிழக்கு தொழில் சந்தைக்கு ஏற்றவிதத்தில் எமது அரசும் சான்றிதழ்களை அத்தாட்சிப் படுத்திக் கொள்வதற்கு ஏற்ற வழி வகைகளை தொழில் தேடும் இளைஞர் யுவதிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்!