போரா முஸ்லீம் மாநாட்டின் மூலம் 31 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டியுள்ள இலங்கை!

இலங்கையில் நடைபெறும் போரா மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார்.

குறித்த போரா மாநாட்டின் மூலம் இலங்கைக்கு 31 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியாக கிடைக்கப் பெற்றுள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது. ‘

எமக்கு இலங்கை மீது நம்பிக்கை உள்ளது ‘ என்ற கருப்பொருளின் கீழ் 40 நாடுகளைச் சேர்ந்த 21,000 போரா சமூகத்தினரின் குறித்த மாநாடு நடைபெற்று வருகிறது.

வறுமையை ஒழித்து சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு இனம், மதம், சமயம் என்ற பேதமின்றி அனைவரும் ஒன்றுபடுவதே இன்று நாட்டின் தேவையாகும் என்று குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

‘ எமக்கு இலங்கை மீது நம்பிக்கை உள்ளது ‘ என்ற கருப்பொருளின் கீழ் 40 நாடுகளைச் சேர்ந்த 21,000 போரா சமூகத்தினரின் பங்குபற்றுதலுடன் இம்மாநாடு இலங்கையில் நடைபெறுவதுடன், வெளிநாடுகளிலிருந்து சுமார் 18,500 போராக்கள் கலந்துகொண்டுள்ளதுடன், இலங்கையைச் சேர்ந்த சுமார் 2,500 போரா சமூகத்தினரும் பங்கு பற்றியிருக்கின்றனர்.

இந்த மாநாட்டின் மூலம் இலங்கைக்கு சுமார் 31 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச் செலாவணியாக கிடைக்கப்பெற்றுள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இது போன்றதொரு மாநாடு 2007ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்றதுடன், அம்மாநாட்டில் 7,000 பேர் பங்குபற்றினர்.