போரா சர்வதேச மாநாடு நிகழ்வின் மூலம் இலங்கைக்கு 900 கோடி மேலதிக ரூபா வருமானம்! -சுற்றுலாத்துறை

போரா சமூகத்தின் சர்வதேச மாநாட்டின் காரணமாக இலங்கைக்கு இதுவரையில் 900 கோடி ரூபாவுக்கும் அதிகமான வெளிநாட்டுச் செலவாணி கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை சுற்றுலாத் துறை அதிகார சபையின் தலைவர் கிசு கோமஸ் தெரிவித்தார்.

பம்பலப்பிட்டிய போரா பள்ளிவாயலில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இந்த மாநாட்டிற்காக 21 ஆயிரம் வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த மாநாட்டுக்கு வருகை தந்தவர்கள் கண்டி உட்பட நாட்டின் முக்கிய சுற்றுலாப் பிரதேசங்களுக்கும் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.