கஞ்சிபான இம்ரானின் உணவில் தொலைபேசியை மறைத்துக் கொடுத்த தந்தை உட்பட 6 பேர் கைது

பூஸ்ஸ சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள  பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபான இம்ரானுக்கு உணவு வழங்கும் பத்திரத்துக்குள் மறைத்து கையடக்கத் தொலைபேசியொன்றையும், சார்ஜர் ஒன்றையும் வழங்க முற்பட்ட அவரது தந்தை மற்றும் சகோதரர் ஒருவர் உள்ளிட்ட 6 பேர் ரத்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபானி இம்ரானை பார்க்க இன்று (12) மாலை வந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.