ரணிலுடன் எதிர்வரும் 6ஆம் திகதி முக்கிய பேச்சுவார்த்தை! -கபீர் ஹாஷிம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் எதிர்வரும் 06ஆம் திகதி மீண்டும் பேச்சுவார்த்தை நடாத்தி, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளதாக அக்கட்சியின் தவிசாளரும் அமைச்சருமாகிய கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

தற்பொழுது நாட்டில் உள்ள அரசியல் நிலவரங்களை வைத்து மக்கள் ஆதரவு குறித்து ஆய்வு செய்து முடிவுக்கு வருமாறும் தாம் பிரதமரைக் கோரவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.