இலங்கையில் விசா இன்றி தங்கிய 44 இந்தியர்கள் கைது!

இலங்கையில் விசா காலம் முடிந்த பிறகும் இந்தியர்கள் சிலர் தங்கியுள்ளதாக குடியேற்றத் துறைக்கு தகவல்கள் கிடைத்தன.

இதனால் இலங்கை குடியேற்றத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், கொழும்புவின் புறநகர் பகுதியில் உள்ள ஸ்லாவே தீவில் உள்ள கட்டுமான தளத்தில் விசா காலம் முடிந்தும் தங்கியிருந்த 44 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்களது விசா காலம் முடிந்து 3 மாதங்கள் ஆகியிருந்தது தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட அனைவரும் 25 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள். அவர்கள் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

மேலும், அதே கட்டிடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி வேலை செய்து கொண்டிருந்த 18 இந்தியர்களின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.