நாளை 4286 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்! -கல்வி அமைச்சு

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கில் நாளை (08) 4286 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக  கல்வியியல் கல்லூரிகளில் மூன்று வருடங்கள் பயிற்சி பெற்று வெளியேறிய டிப்ளோமா பட்டதாரிகளுக்கே இவ்வாறு நாளை நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.