ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர்கள் 41 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்!

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக கூறப்படும் சந்தேகநபர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி ஒத்தாசை வழங்கியவர்கள் எனக் கருதப்படும் 41 பேரின் 100 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த வங்கிக் கணக்குகளில் 134 மில்லியனுக்கும் அதிகமான தொகை வைப்பில் காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்த சந்தேகநபர்களிடமிருந்த 20 மில்லியனுக்கும் அதிகமான பணம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அப்பிரிவு மேலும் கூறியுள்ளது.