நிகாப் அணிந்த 4 பேர் கைது - காலி முகத்திடலில் சம்பவம்!காலி முகத்திடலில் கடந்த வெள்ளிக்கிழமை (30) அன்று குடும்பமாக வந்த பெண்களில் 4 பேர், முகம் மூடும் விதமாக ஆடை (முகத்திறை/நிகாப்) அணிந்து வந்தார்கள் என்பதற்காக கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.


அமுலில் இருந்த அவசரகால சட்டத்தின் கீழ், முகம் மூடும் விதமாக ஆடை அணிவது தடை செய்யப்பட்டது.


எனினும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் திகதிக்குப் பின்னர் அவசரகால சட்டம் தளர்த்தப்பட்டது. ஆனாலும் முகம் மூடும் சட்டம் தளர்த்தப்பட்ட விடயத்தில் இன்னமும் குழப்பங்கள் நீடித்து வருகிறது.


அந்த நிலையிலேயே மேற்குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்னர் முன்னாள் மேல் மாகாண முதலமைச்சர் ஆசாத் சாலியின் தலையீட்டில் அவர்கள் பெண் போலீஸ் அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டதன் பின்னர் வாக்கு மூலம் பெற்றுக்கொண்டு விடுவிக்கப்பட்டனர்.