பெரஹெரவில் ஏற்பட்ட விபரீதம் – 17 பேர் காயம்

கோட்டை- ரஜமகா விகாரையில் இரண்டு யானைகளுக்கு மதம் பிடித்ததில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

வரலாற்று சிறப்புமிக்க கோட்டை – ரஜமகா விகாரையின் 119ஆவது பெரஹெரா நிகழ்வு நேற்று (07) இடம்பெற்றது.

இதனை காண்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் வீதி இருமருங்கிலும் காணப்பட்டனர்.

இதன்போது, குறித்த பெரஹெரா பேரணி விகாரையை நெருங்கியவேளை, யானையொன்றுக்கு மதம் பிடித்தது. இதனையடுத்து, யானை வீதியில் ஓடிச்சென்று, பேரணியில் இருந்த இன்னொரு யானையுடன் சண்டையிட்டது.

இதனால், அந்த யானைக்கும் மதம் பிடித்தமையால், பெரஹெர நிகழ்வைக் காண வந்திருந்த 17 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 12 பெண்களும் உள்ளடங்குவதாகவும் இவர்கள் தற்போது வைத்தியசாலைகளில் அனமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.