என்னாது? 17 நபர்கள் ஜனாதி வேட்பாளர்களா?

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 17 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னிலையாவது தொடர்பில் அங்கீகரிக்கப்பட்ட 14 அரசியல் கட்சிகள் எழுத்து மூலமாகவும் மேலும் இரண்டு அரசியல் காட்சிகள் வாய்மொழி மூலமாகவும் தமக்கு அறிவித்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜனாதிபதித் தேர்தலில் சுயாதீனமாக ஒருவர் போட்டியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்பார்ப்பவர்கள் அது தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அனைத்து கட்சிகளுக்கும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.