கோத்தாபயவுக்கு எதிரான மனு கலிபோர்னியா நீதிமன்றில் 16 ஆம் திகதி விசாரணை!

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அஹின்சா விக்ரமதுங்கவினால் தாக்கல் செய்துள்ள மனு, எதிர்வரும் செப்டம்பர் 16 ஆம் திகதி கலிபோர்னியா நீதிபதி மானுவல் ரியல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது புறக்கணிக்குமாறு கோத்தாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணி அசொக டி சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த வழக்கைத் தொடுத்துள்ள மனுதாரர், வெளிநாட்டில் வசிப்பவர் எனவும், அவருக்கும் அமெரிக்காவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லையெனவும், இதனால் அமெரிக்க நீதிமன்றத்துக்கு அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள எந்தவித அதிகாரமும் இல்லையெனவும் சட்டத்தரணி அசோக டி சில்வா அமெரிக்க நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளதாகவும் சிங்கள நாளிதழொன்று தெரிவித்துள்ளது.