தவறுதலாக வெடித்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான 14 வயது சிறுவன்!

மட்டக்களப்பு, கித்துள் காட்டுக்கு உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 4 பேர் வேட்டைக்கு சென்ற நிலையில் குறித்த துப்பாக்கி தவறுதலாக இயக்கப்பட்டதில் 14 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த குறித்த சிறுவன், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.