பாகிஸ்தான் தொடரில் இருந்து விலகிய இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை அணியின் சில வீரர்கள் விலகியுள்ளனர்.

1. டி கருணாரத்ன
2. லசித் மாலிங்க
3. ஏஞ்சலோ மெத்தியூஸ்
4. என் டிக்வெல்ல
5. குசால் பெரேரா
6. டி டீ சில்வா
7. திசார பெரேரா
8. ஏ தனஞ்ஜய
9. எஸ் லக்மால்
10. டி சந்திமால்

இவர்கள் பாதுகாப்புக் கருதி குறித்த தொடரில் இருந்து விலகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடப்படவுள்ள 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளையும் கராச்சி மற்றும் லாகூரில் இம்மாத இறுதியில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.