போரா சமூகத்தின் 10 நாள் சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று ஆரம்பம்!

போரா சமூகத்தின் சர்வதேச மாநாடு இன்று (01) கொழும்பு, பம்பலப்பிட்டி கரையோர வீதியிலுள்ள போரா பள்ளிவாயலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

10 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் சர்வதேச நாடுகளிலிருந்து சுமார் 21 ஆயிரம் போரா சமூகத்தினர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பம்பலப்பிட்டிய கரையோரப் பிரதேசத்தை மையப்படுத்தி நடாத்தப்படும் இந்த மாநாட்டுக்காக விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக போரா சமூகத்தின் தலைவர் கலாநிதி செய்யுது முபாசால் சையிதீன் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவரின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த மாநாட்டுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க சில சிங்கள தீவிரவாத அமைப்புக்கள் தயாராவது தெரியவந்தவுடன், எதிர்வரும் 10 நாட்களுக்கு பொலிஸாரினால் ஆர்ப்பாட்டங்கள் நடாத்துவதற்கான நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.