4 ஆவது இன்னிங்சில் சதம் பெற்ற இலங்கை டெஸ்ட் அணித்தலைவர்கள் வரிசையில் இடம்பெற்றார் திமுத் கருணாரத்ன!!

நியுசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் 4 ஆவது இன்னிங்சில் சதம் அடித்து தனது 9 வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார் இலங்கை அணித்தலைவர் திமுத் கருணாரத்ன.

4 ஆவது இன்னிங்சில் சதம் பெற்ற இலங்கை டெஸ்ட் அணித்தலைவர்கள் வரிசையிலும் இவர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது இலங்கை அணி 212/2 இல் உள்ள நிலையில் வெற்றி பெற இன்னும் 56 ரன்களே தேவை.

4 ஆவது இன்னிங்சில் சதம் பெற்ற இலங்கை டெஸ்ட் அணித்தலைவர்கள்,

D Mendis vs IND (1985)
Jayawardene vs SA (2006)
Sangakkara vs PAK (2009)
Mathews vs IND (2015)
Karunaratne vs NZ (2019)*