முஸ்லிம் காங்கிரஸ்ஸின் இரு அமைச்சர்கள் மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்கத் தீர்மானம்!

ali zahir mowlana
அண்மையில் அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான பைஸால் காசிம் மற்றும் அலிசாஹிர் மௌலானா ஆகியோர் மீண்டும் அமைச்சுப் பதவிகளை எடுப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீமின் தலைமையில் இன்று (22) நடைபெற்ற கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த வகையில் இரு இராஜாங்க அமைச்சர்களை நியமிக்குமாறு கோரி பிரதமர் காரியாலயத்திலிருந்து ஜனாதிபதி செயலகத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.