இறுதி நேரத்தில் மாற்றப்பட்ட பெண் ஜனாதிபதி வேட்பாளர்!


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க வேட்பாளராக களமிறங்கவுள்ளார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் மற்றும் மன்றாடியார் நாயகம் தில்ருக்க்ஷி டயஸ் விக்ரமசிங்க இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது.

எனினும் அவரை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்க திட்டமிட்ட தரப்பினர் திடீரென அவருக்கு பதிலாக முன்னாள் நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை தெரிவு செய்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பொருட்டு தனது பதவியை இராஜினாமா செய்வதாக தில்ருக்க்ஷி டயஸ் சமர்ப்பித்த கடிதத்தை அவர் மீளப்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.