சவூதி செல்வந்தர் தனது மகனின் பிறந்த நாள் பரிசாக தவறுதலாக இரு விமானங்களை கொள்வனவு செய்துள்ளார் !!

சவூதி அரேபியாவில் உள்ள ஒரு செல்வந்தர் தவறுதலாக இரண்டு ஏர்பஸ் ஏ350-1000 விமானங்களை கொள்வனவு செய்துள்ளார். எரிசக்தி துறையில் முதலீட்டாளரான அந்த நபர், விமானத்தின் பெரிய ரசிகரான தனது மகனுக்கு பிறந்தநாள் பரிசைத்தேடிக்கொண்டிருந்தார்.

அவர் மாடல் விமானங்களை கொள்வனவு செய்வதற்கு பிரபல விமான உற்பத்தியாளரான ஏர்பஸ் நிறுவனத்திற்கு அழைப்பினைமேற்கொண்டு ஓர்டர் செய்துள்ளார்.

"அவர்கள் உள்துறை மற்றும் வெளிப்புறம் பற்றி பல கேள்விகளைக் கேட்டார்கள், அவர்கள் மிகவும் துல்லியமான அளவிலானமாதிரிகளை உருவாக்குவார்கள் என்று நான் நினைத்தேன்."

ஏறக்குறைய 329 மில்லியன் யூரோ விலைக் கூட அவருக்கு பெரிதாய் தென்படவில்லை.

"நான் நாணய மாற்றங்களில் குழம்பி போனேன், இவை சற்று விலை உயர்ந்தாக இருந்தாலும், நியாயமானது என்று நான் நினைத்தேன்"

அவர் தனது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் அட்டையினூடாம பணம் செலுத்தினார். சில மாதங்களுக்குப் பிறகு, விமானங்கள் ரெடியாகஉள்ளதாக ஏர்பஸ் நிறுவனமிடமிருந்து அழைப்பு வந்தது.

"யார் விமானங்களை செலுத்தவுள்ளதாக அவர்கள் கேட்டார்கள், என்னை கலாய்ப்ப்தாக எண்ணினேன்"

பிறகு சவுதி செல்வந்தர் ஒரு விமானத்தினை வைத்துக் கொண்டு மற்றதை தனது உறவினருக்கு பரிசளித்தார்.