சாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வெளியீடு!!

O/L Examination results
2018ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான மீள்திருத்த பெறுபேறுகள் வௌியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய www.doenets.lk  என்ற இணையத்தளத்தினூடாக மீள்திருத்த பெறுபேறுகளை பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பெறுபேறுகளில் ஏதேனும் குளறுபடிகள் காணப்படும் பட்சத்தில் பரீட்சைகள் திணைக்களத்திற்கு நேரடியாக அறிவிக்க முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய 011-2784208, 011-2784537, 011-3188350 அல்லது 011-3140314 ஆகிய தொலைபேசி இலங்கங்களூடாக அறிவிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

மீள் திருத்தத்திற்காக 97 ஆயிரத்து 895 மாணவர்கள் விண்ணப்பத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.