மல்வானையில் வாள்களுடன் கொள்ளையடிக்க வந்த கும்பல் வாட்சப் உதவியால் மடக்கி பிடிப்பு!!

சற்றுமுன் மல்வானை பகுதியிலுள்ள பிரபல (முஸ்லிம்) வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்க வாள்கள் சகிதம் வந்த கும்பலொன்றை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சுமார் 6 பேர் கொண்ட கொள்ளை கும்பலில் 3 பேர் மாத்திரமே மடக்கி பிடிக்க பட்டுள்ளனர். ஏனையோர் தப்பி சென்றுள்ளனர்.

வீட்டிலுள்ள CCTV கமெராக்கள் கடந்த சில நாட்களாக பழுதடைந்திருந்த நிலையில் இந்த சம்பவம் இன்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வீட்டினுள் இறங்கி வாள் முனையில் அனைவரின் கைகளையும் கட்டி விட்டு பணம்,நகை தேடிய வேளையில் வீட்டின் மேல்மாடியின் அறையிலிருந்த வர்த்தகரின் மகன் சம்பவத்தை அவதானித்ததும் உடனடியாக வட்சப் மூலம் தகவலை பகிர்ந்துள்ளார்.

சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் உடனடியாக களத்திலிறங்கினர். பொதுமக்கள் வீட்டை சுற்றி முற்றுகையிட்ட வேளையில் இருவர் கையும் மெய்யுமாக பிடிபட்டனர்.

ஏனையோர் தப்பி சென்றுள்ளனர், இதன் பின்னர் குறித்த கொள்ளை சம்பவத்திற்கு ஒத்து பார்த்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒருவன் சற்றுமுன் பிடிக்கப்பட்டுள்ளான். பிடிபட்டவர்கள் டொம்பே மற்றும் பியகம பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.