கோத்தபாய ராஜபக்ஷ மிகவும் பலவீனமான வேட்பாளர்! - சத்துர சேனாரத்ன

chathura politics
இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மிகவும் பலவீனமாக வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ராஜபக்ச அணியின் சார்பில் சமல் ராஜபக்ஷ வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தால், அவர் வலுவான வேட்பாளராக இருந்திருப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். நல்லாட்சியை அழிக்கவே கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகிறார்.

இதனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையான கூட்டணி தெளிவான வெற்றியை பெறும் எனவும் சத்துர சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சத்துர சேனாரத்ன, அமைச்சர் ராஜிதன சேனாரத்னவின் புதல்வராவார்.