கஞ்சிபான இம்ரானுக்கு கடூழிய தண்டனை விதித்த நீதிமன்றம்!

கஞ்சிபான இம்ரானுக்கு  6 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து  கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிபதி கிஹான் குலதுங்க முன்னிலையில், கஞ்சிபான இம்ரானுக்கு எதிரான வழக்கு விசாரணை  இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இதன்போது 5.300 கிலோ கிராம் கஞ்சா போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டினை பிரதிவாதியான கஞ்சிபான இம்ரான் ஒப்புக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கஞ்சா வைத்திருத்தல் மற்றும் கஞ்சா கடத்தியமை போன்ற 2 குற்றச்சாட்டுகளுக்காக தலா 3 ஆண்டுகள் வீதம் 6 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மாளிகாவத்தை பகுதியில் 5.300 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்தமை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டில் கஞ்சிபான இம்ரான் மீது 2018 செப்டம்பர் 13 ஆம் திகதி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது