கண்டி தலதா பெரஹராவில் சஹ்ரான் போல் ஒருவன் பாய்ந்திருந்தால், எவராலும் தடுக்க முடியாமல் போயிருக்கும்.! -விமல் வீரவங்ச

கண்டி தலதா பெரஹரா முடியும் வரையில் தான் பெரும் அச்சத்துடன் இருந்ததாகவும், அதன் மீது சஹ்ரான் ஒருவர் பாய்ந்திருந்தால், காதினலினாலும், மகாநாயக்கர்களினாலும் மக்களைத் தடுத்திருக்க முடியாமல் போயிருக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

ஹொக்கந்தர பகுதியில் இடம்பெற்ற  பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

இவ்வாறு நடைபெற்றிருந்தால், அமெரிக்காவின் நோக்கத்தை எதிர்பார்க்காத விதத்தில் அடைந்து கொள்ள முடியுமாக இருந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக அரசியல் தலைவர்கள் கூறிக் கொண்டு திரிந்தாலும், இந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த  அச்சம் நீங்கவில்லையெனவும், அச்சத்துடனேயே அடுத்த ஐந்து மாத காலத்தைக் கழிக்க வேண்டியுள்ளதாகவும் விமல் வீரவங்ச எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.