இலங்கையின் முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரி குளியாப்பிட்டியில் ஆரம்பம்.!

நாட்டில் தொழில்நுட்ப கல்வியை வலுப்படுத்துவதற்காக முதலாவது தொழில்நுட்ப கல்வியல் கல்லூரியை நிர்மாணிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொழில் செயற்றினைக் கொண்ட ஆசிரியர் சமூகம் ஒன்று பாடசாலை கட்டமைப்புக்கு பங்களிப்பு செய்யும் நோக்கில் இது ஆரம்பிக்கப்படவுள்ளது.

குளியாப்பிட்டி நாரங்கொல்ல எனும் இடத்தில் இன்று (31) அதற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, கல்வியில் நவீன மய நடவடிக்கையையும், பொருளாதாரத்தில் நவீன மயத்தையும் முன்னெடுக்கும் நடவடிக்கையாக நாட்டில் முதலாவது தொழில்நுட்ப கல்வியில் கல்லூரி நிர்மாணிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.