சுயமாக சிந்திக்கும் எந்த ஒரு தமிழனும் கோட்டாவிற்கு வாக்களிக்க மாட்டான்.! -சி.வி.விக்னேஸ்வரன்

சுயமாக சிந்திக்கும் எந்த ஒரு தமிழனும் கோட்டாவிற்கு வாக்களிக்க மாட்டான் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமாகிய சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், எனக்கு தெரிந்த வரையில், சுயமாக சிந்திக்கும் எந்த ஒரு தமிழனும் கோட்டாவிற்கு வாக்களிக்க மாட்டான். வாக்களிக்கக்கூடாது.

தமிழ் மக்களை கொன்று குவித்தவர்களில் அவரும் ஒருவர். இறுதி நேரத்தில் ஆயுதங்கள் எல்லாவற்றையும் விட்டு வெள்ளைக்கொடியுடன் போகும்போது அவர்கள் எல்லோரையும் கொன்று குவிக்குமாறு ஆணை வழங்கப்பட்டது.

இந்த ஆணை வேறு எவராலும் வழங்கப்பட்டிருக்க முடியாது. அதற்கு பொறுப்பாக இருந்தவர்தான் செய்திருக்க வேண்டும். இவ்வாறு மக்களை ஜீவகாருண்யமற்ற வகையில் கொன்று குவித்தவருக்கு வாக்களிக்க முடியாது.

அதைவிட வெள்ளை வான். தமிழ் மக்கள் எந்தக் காலத்திலும் அவருக்கு வாக்களிக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.