களுத்துறை மாவட்ட மக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

களுத்துறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு, குறைந்த அழுத்த நீர் விநியோகம் மற்றும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் மூன்று வார காலத்திற்கு மேற்படி நீர் வழங்கும் நடவடிக்கைகளில் சிக்கல் நிலை ஏற்படுமெனவும் அச்சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் புதுப்பிப்பு பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி வாத்துவ, பொதுபிடிய, களுத்துறை, கடுபெத்த, நாகொட மற்றும் பயாகல ஆகிய பிரதேசங்களுக்கே இவ்வாறு குறைந்த அழுத்த நீர் விநியோகம் மற்றும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, பிலமினாவத்த, போம்புவல, மக்கொன, பேருவளை, களுவாமோதர, மோரகொள்ள, அலுத்கம, தர்கா நகர் மற்றும் பென்தொட்ட ஆகிய பகுதிகளும் உள்ளடங்குவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.