தாஜுதீன், லசந்த வழக்குகளை விரைவுபடுத்தவும்.! சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபரிடம் வேண்டுகோள்!

லசந்த விக்ரமதுங்க கொலை மற்றும் வசீம் தாஜுதீனின் கொலை உட்பட தேக்கத்தில் உள்ள சம்பவங்களின் விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா பதில் பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்னவுக்கு இன்று (15) கடிதம் ஒன்றின் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொலிஸாரினால் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்காக தனது திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்படும் ஆவணங்களை சரியான முறையில் முழுமைப்படுத்தி ஒப்படைக்குமாறும் அவர் அந்தக் கடிதத்தில் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.