புதிய இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவின் விசேட அறிவிப்பு!

sri lanka
வடக்கிலுள்ள எந்தவொரு படைமுகாமையும் அகற்றப்போவதில்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அதேவேளை தன்மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்திவரும் தரப்பினருக்கு இராணுவத் தளபதி இன்று பதிலளித்தார்.

மன்னார் படுகுழியில் மனித எச்சங்கள் வெளிவர ஆரம்பித்தபோது குற்றச்சாட்டுக்களும் சந்தேகங்களும் வெளியிடப்பட்டதாக நினைவுப்படுத்திய இராணுவத் தளபதி, ஆனால் இறுதியில் அவை மாயமாகியதாக குறிப்பிட்டார்.

அதேபோலவே இந்தக் குற்றச்சாட்டுக்களையும் தாம் அவதானிப்பதாகவும் கூறினார்.