ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுகிறார் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்!!

MP Sri lanka
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனி முஸ்லிம் வேட்பாளராக களமிறங்க முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தீர்மானித்துள்ளதாக அவரது நெருக்கமான தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை உலகத்திற்கு ஓரணியில் நின்று எடுத்துச் சொல்லவும், இரு பிரதான கட்சிகளின் மீதான முஸ்லிம் மக்களின் நம்பிக்கையின்மையை பகிரங்கமாக வெளிப்படுத்தவும் இவ்வாறு அவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரியவந்தது.

 இந்தத் தகவலை ஹிஸ்புல்லாஹ் உறுதி செய்துள்ளார்.

தேர்தலில் போட்டியிட பல்வேறு மட்டங்களில் இருந்து எனக்கு அழைப்பு வருகிறது.பலர் ஆலோசனைகளை சொல்கிறார்கள். அறிவுரை வழங்குகின்றனர் .நேரம் வரும்போது களத்தில் குதிப்பேன் என ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.