கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளே இன்றைய விளைவு! – வஜிர அபேவர்தன

கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளின் காரணமாகவே பல நெருக்கடிகள் இன்று நாட்டுக்கு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

தவறான அரசியல் தீர்மானங்கள் மற்றும் தவறான பொருளாதார அபிவிருத்தி மையங்கள் நிர்மாணிப்பு ஆகியவற்றை கடந்த அரசாங்கம் தமது தேவைக்காக நிறைவேற்றியதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யக்கலமுல்ல பிரதேச செயலகத்தில் இன்று (25) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “கடந்த அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளின் காரணமாகவே பல நெருக்கடிகள் இன்று நாட்டுக்கு ஏற்பட்டுள்ளன.

தவறான இடத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனால் கப்பல்கள் எவையும் துறைமுகத்திற்கு வருவதில்லை. ஒரு நாளைக்கு காலி துறைமுகத்தினை கடந்து 200 இற்கும் அதிகமான கப்பல்கள் செல்கின்றன. ஆனால் எவையும் காலி துறைமுகத்தில் தரிப்பதில்லை.