எதிர்வரும் தேர்தலை நடத்துவதற்கு சாத்தியம் இல்லை!!

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லையென தேர்தல்கள் ஆணையக தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியிட்ட அறிக்கையில் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த மஹிந்த தேசப்பிரிய இன்று, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லையென தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலை உடனடியாக நடத்துமாறு உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு நேற்றைய தினம் அறிவித்திருந்தமையையடுத்து தேர்தல்கள் ஆணையக தலைவர் மாகாண சபை தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்திருந்தார்.