நாட்டை பாதுகாக்கவே நாம் கடுமையாக போரில் ஈடுபட்டோம்! -இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

sri lanka
உயிரைப் பணயம் வைத்து தாம் நாட்டை பாதுகாக்க உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டி அஸ்கிரி, மல்வத்து பீடாதிகளை இன்று (25) சந்தித்ததன் பின் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டை பாதுகாக்கவே நாம் போரில் ஈடுபட்டோம், எதிர்காலத்திலும் அதேவாறு தாய் நாட்டை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உயிரை பணயம் வைத்தேனும் நான் தொடர்ந்தும் தாய் நாட்டை பாதுகாப்பேன். இயற்கை நீதி நெறிமுறைமை என்று ஒன்று உள்ளது.

அதன் ஊடாக போர்க் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர்வரும் காலங்களில் பதில் கிடைக்கும். புலனாய்வுப் பிரிவினை வலுப்படுத்தி நாம் நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.