தேசிய டென்னிஸ் சம்பியனானார் அஞ்சலிகா!

இலங்கை டென்னிஸ் சங்­கத்­தினால் நடத்­தப்­பட்ட 104ஆவது தேசிய டென்னிஸ் போட்­டியில் பெண்கள் ஒற்­றையர் பிரிவில் நீர்­கொ­ழும்பு ஆவே மரியா கன்­னி­யாஸ்­தி­ரிகள் மடத்தைச் சேர்ந்த மாணவி அஞ்சலிகா குரேரா சம்­பி­ய­னானார்.

இலங்கை டென்னிஸ் சங்க அரங்கில் நேற்­று­முன்­தினம் நடை­பெற்ற பெண்­க­ளுக்­கான ஒற்­றையர் இறுதிப் போட்­டியில் ஜனலி மனம்பெரியை 2 நேர் செட்­களில் வெற்­றி­கொண்ட 15 வய­தான அஞ்ச­லிக்கா குரேரா முதல் தட­வை­யாக தேசிய சம்­பி­ய­னானார்.

இறுதிப் போட்­டியில் மிகவும் நேர்த்­தி­யாக விளை­யா­டிய அஞ்­ச­லிகா தனது எதி­ரா­ளியை சுமார் ஒரு மணித்­தி­யா­லத்தில் 6–1, 6–0 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்­றி­கொண்டு சம்­பியன் பட்­டத்தை சுவீகரித்தார்.

நிரல்­ப­டுத்­தலில் நான்காம் இடத்­தி­லுள்ள அஞ்­ச­லிகா, கால் இறுதியில் கெமாலி ஹேரத்­தையும் அரை இறுதியில் அனிக்கா செனவிரட்னவை இலகுவாக வெற்றி கொண்டிருந்தார்.