மகிந்த அணியின் சார்பில் தேர்தலில் களமிறங்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

Mahinda Rajapaksa
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், துடுப்பாட்ட வீரருமான திலகரட்ன தில்ஷான் அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிட உள்ளதாக தெரியவருகிறது.

திலகரட்ன தில்ஷான், எதிர்வரும் பொதுத் தேர்தலில் களுத்துறை அல்லது காலி மாவட்டத்தில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

தில்ஷான் சில மாதங்களுக்கு முன்னர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து ஸ்ரீங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.